காதல் மன்னனாக வலம் வந்த கணவரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி

காதல் மன்னனாக வலம் வந்த கணவரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி

காதல் மன்னனாக வலம் வந்த கணவரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி
Published on


 கணவரின் லீலைகள் பொறுக்காமல் அவரது பிறப்பு உறுப்பையே வெட்ட தீர்மானித்த மனைவியின் திட்டம் இறுதியில் கொலையில் போய் முடிந்துள்ளது. 

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஷஃபதுல்லா கான். இவரது மனைவி ஆயிஷா. இவர்கள் ஜபல்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி இவரது வீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மார்பு பகுதியில் கத்தியால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் சர்வசாதாரணமாக வீட்டிற்குள் சென்று வருவது தெரியவந்தது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ஆயிஷா முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால சந்தேகமடைந்த காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். கொலை குறித்து ஆயிஷா அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். 

ஷஃபதுல்லா கான் பெண் பித்தராக இருந்துள்ளார். வேலை தருவதாக கூறி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது சொந்த மகளிடமே தீய எண்ணத்தில் அணுகியதாகவும், ஆயிஷாவின் சகோதரி மகள் சிறு வயதாக இருந்த போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். தனது கணவரின் பிறப்பு உறுப்பை அறுக்கதான் முதலில் முடிவு செய்தோம். இறுதியில் இது கொலையில் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆயிஷா மற்றும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com