லக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ 

லக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ 

லக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ 
Published on

விமானத்தில் பயணிக்கும் போது பயண உடமைகளின் எடை அதிகமானதால் அதனை குறைக்க பெண் ஒருவர் ஒரு வித்தியாசமான செயலை செய்துள்ளார். 

விமானத்தில் பயணிக்கும் போது பயணிகளின் மிகப்பெரிய சவாலாக இருப்பது அவர்களது பயண உடமைகளை, கொடுக்கப்பட்டுள்ள எடைக் கணக்கிற்குள் கொண்டு செல்வது தான். ஒருவரின் பயண உடமைகள் அதிகமாக இருந்தால் அவர் மீது அந்த விமான நிறுவனம் அபராத தொகையை வசூலிக்கும். இதற்காக பயணிகள் தங்களின் உடமைகளை பார்த்து எடுத்து செல்வார்கள். 

அந்தவகையில் பயணி ஒருவரின் உடமையின் எடை அதிகமாக இருந்ததால், அதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க விமான நிலைய ஊழியர்கள் முயன்றனர். அப்போது அந்தப் பயணி உடமையின் எடையை வித்தியாசமாக குறைத்தார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்ற அந்த பயணி, கடந்த 1ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் சென்றுள்ளார். 

அப்போது அவர் கொண்டு வந்த பயண உடமையின் எடை குறிப்பிடப்பட்ட எடையைவிட அதிகமாக உள்ளது என விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கூடுதல் கட்டணத்தை ரோட்ரிக்ஸ் இடம் கேட்டுள்ளார். கூடுதல் கட்டணத்தை தர மறுத்த ரோட்ரிக்ஸ், உடனடியாக ஒரு யோசனை செய்துள்ளார். 

தன்னுடைய லக்கேஜ்ஜில் உள்ள ஆடைகள் சிலவற்றை எடுத்து அணிந்து கொண்டுள்ளார். அந்த ஆடைகளே இரண்டு கிலோவுக்கு மேல் இருந்துள்ளது. இந்த செயல் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி உள்ளது. இந்தப் பதிவை பலர் ஷேர் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com