பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது!

பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது!

பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது!
Published on

காஷ்மீரில் பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு இளைஞர்களை இழுத்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களையும் மாணவர்களையும் பயங்கரவாத இயக்கத்துக்கு இழுக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மூளை சலவை செய்து அவர்களை பயங்கரவாத இயக்கத்துக்குள் இழுத்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சிலர் தூண்டி வருகின்றனர். இதுபற்றி உளவுத் துறைக்கு வந்த தகவலை அடுத்து, அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் வடக்கு காஷ்மீர் மாநிலம் பந்திபோர் மாவட்டத்தில் உள்ள நாய்ட்காய் என்ற பகுதியை சேர்ந்த சாஷியா என்கிற பெண்ணை உளவுப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முப்பது வயதுக்குள் இருக்கும் அந்த பெண், பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுத்து, ஆயுதப் போராட்டம் நடத்த தூண்டியதாகவும் ஜெய்ஸ் - இ - முகமது இயக்கத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் பேஸ்புக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டது. 

அவரிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com