“மேரேஜ்ஜை தாமதப்படுத்தியதால் காதலனை கொன்றுவிட்டேன்”.. போலீசில் தானாக வந்து சரணடைந்த பெண்

“மேரேஜ்ஜை தாமதப்படுத்தியதால் காதலனை கொன்றுவிட்டேன்”.. போலீசில் தானாக வந்து சரணடைந்த பெண்
“மேரேஜ்ஜை தாமதப்படுத்தியதால் காதலனை கொன்றுவிட்டேன்”.. போலீசில் தானாக வந்து சரணடைந்த பெண்

லிவ்-இன் வாழ்வில் இருந்து வந்த தன்னுடைய காதலனை கொன்றுவிட்டதாக மும்பையின் பொவாய் பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் போலீசிடம் சரணடைந்திருக்கிறார்.

ரம்ஜான் ஷேக் என்ற நபரை திருமணம் செய்துக் கொள்வதாக இருந்த நிலையில் அவர் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததால் ஸொரா ஷா என்ற அந்த பெண்  ஷேக்கை கொன்றதாக கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் நேற்று (ஆக.,27) நடந்திருக்கிறது. மும்பையின் பொவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்படா பகுதியில் இறந்த ரம்ஜான் ஷேக்கும் ஸொரா ஷாவும் கடந்த ஓராண்டாக ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ALSO READ: 

அந்த பெண் சில காலமாக ஷேக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வந்திருக்கிறார். ஆனால், ரம்ஜான் ஷேக் காலதாமதம் செய்ததால் அவர்களுக்கிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவியிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் நேற்று ஸொரா ஷா தன்னுடன் காவல்நிலையத்திற்கு வரும்படி கூறியிருக்கிறார்.

அவர் மீது மோசடி புகார் கொடுக்க விரும்புவதாகவும் ஷேக்கிடமே ஸொரா ஷா கூறியதால் ஆட்டோ டிரைவரான ரம்ஜான் ஷேக் போலிஸ் ஸ்டேஷன் செல்லும் வழியிலேயே வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஸொரா ஷா தனது துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக நெரித்திருக்கிறார். இதில் நிலைக்குலைந்து ஷேக் அங்கேயே இறந்திருக்கிறார்.

பின்னர் ஆரே பகுதி போலீசிடம் ஸொரா ஷா சரணடைந்திருக்கிறார். தகவல் அறிந்ததும் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஸொரா ஷா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com