மாமியாரை சாலையில் இழுத்து சரமாரியாக தாக்கிய மருமகள்.!
ஹைதராபாத்தில் இளம் பெண் ஒருவர் தனது மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாலையில் அடித்து துன்புறுத்தியது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் மல்லேபள்ளியில் வசித்துவரும் உஜ்மா என்ற பெண் அவரது தாயுடன் சேர்ந்து தனது மாமியாரைத் தாக்கியுள்ளார். இதனால், மாமியார் தனிஷிகா சுல்தானாவும், மருமகள் உஜ்மா பேகமும் காவல்நிலையத்தில் ஒருவருக்கொருவர் புகார் அளித்துக்கொண்டார்கள்.
காவல்துறை விசாரணை செய்ததில், கடந்த 10 வருடமாக உஜ்மாவின் கணவர் சவுதி அரேபியாவில் வசித்து வருவதாகவும் அவருடன் மாமியார் பேச விடுவதில்லை என்றும் பரப்பரப்பு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வீட்டின் மேல்பகுயில் மாமியாரும் கீழ்வீட்டில் மருமகளும் வசித்து வந்துள்ளனர். இதில் கீழ்வீட்டிற்கு சரியாக குடிநீர் அனுப்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு, இருவரையும் காவல்துறை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

