கணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற அம்மா

கணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற அம்மா

கணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற அம்மா
Published on

கணவரின் சிகிச்சைக்காக மகனை விற்கும் நிலைமை ஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஹல்தியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண். அன்றாடக் கூலிவேலையில் ஈடுப்பட்ட வந்த இவரது கணவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. தனது கணவனை பாதிப்பில் இருந்து மீட்க போராட்டி வந்தார். ஆனால் அடிப்படைச் செலவுகளுக்குக் கூட பணமில்லாததால் சிகிச்சை கைக்கெட்டாமல் இருந்து வந்துள்ளது. கணவனின் நோய் ஒருபுறமும், வறுமை மறுபுறமும் வதைத்து வந்த நிலையில் ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்தப்பெண். ஆனாலும் கணவரின் நோய்க்கு முன் ஆண் மகனைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியை அந்த வறுமைத் தாயால் அனுபவிக்க இயலவில்லை. பிரசவித்த உடம்போடு கணவனின் சிகிச்சைக்காக உதவிகேட்டு அலைந்து திரிந்த அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. கணவன் உயிரைக் காப்பாற்ற வேறு வழியே இல்லையா என நிர்க்கதியற்று தவித்தவருக்கு தனது குழந்தை மட்டுமே கணவரின் உயிரைக் காப்பாற்றக் கூடிய துருப்புச்சீட்டு என்ற முடிவுக்கு வந்தார். பிறந்து 11 நாட்களே ஆன தனது குழந்தையை விற்க முடிவெடுத்தார். குழந்தையில்லாத தனது தூரத்து உறவினரை அணுகினார். குழந்தைக்கு விலையாக 5000 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டது. பணமும் குழந்தையும் கைமாறியது. சிலநாட்கள் கழித்து விஷயத்தை கேள்விப்பட்ட தனியார் தொண்டு நிறுவனமான சைல்டு லைன் ஃபவுண்டேசன் குழந்தையை மீட்டிருக்கிறது. தற்போது அந்தக் குழந்தையை அரசு காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அந்தக் குழந்தையில் தந்தை, ‘எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதாகக் கூறுகிறார்கள். எனது சிகிச்சைக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து உதவ வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். திரிபுராவில் கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் நிகழந்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com