\
இரண்டு வயது குழந்தையை கொன்று அலமாரியில் மறைத்த கொடூரப் பெண் !

இரண்டு வயது குழந்தையை கொன்று அலமாரியில் மறைத்த கொடூரப் பெண் !

இரண்டு வயது குழந்தையை கொன்று அலமாரியில் மறைத்த கொடூரப் பெண் !
Published on

மேற்கு வங்கம் மாநிலத்தின் தன்னுடைய நெருங்கிய உறவினரின் 2 வயதுக் குழந்தையை கொடூரமாக கொலை செய்து அலமாரியில் மறைத்து வைத்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

மேற்கு வங்கம் மாநிலம் பிர்பம் மாவட்டத்தின் காஷிபூர் கிராமத்தில் வசித்து வருபவர் தாஜ்மிரா பீபி. இவருக்கும் தன்னுடைய கணவரின் தங்கைக்கும் குடும்பப் பகை பலகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கணவரின் தங்கையுடைய 2 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை மறைக்க தன் வீட்டின் அலமாரியில் சடலத்தை மறைத்து வைத்துள்ளார்.

குழந்தையை காணவில்லை என பெற்றோர் போல்பூர் போலீஸிடம் புகாரளித்தனர். இதனையடுத்து தாஜ்மிராவிடம் விசாரணை மேற்கொண்டு அவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அலமாரியில் குழந்தையின் சடலம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. குழந்தையை கொலை செய்தது தொடர்பாக தாஜ்மிரா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போல்பூர் நீதிமன்றத்தில் தாஜ்மிரா ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com