'நாய்க்கு வந்த வாழ்வ பாரேன்..' இதுதாண்டா பர்த்டே பார்ட்டி..!
செல்லப்பிராணிகள் என்றாலே அதையும் வீட்டில் ஒரு நபராக பார்க்கும் வழக்கம் இன்று இல்லை பல காலமாக இருக்கும் ஒன்றுதான். அதிலும் குறிப்பாக, நாய், பூனையை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நபர்கள் அதற்கென பிரத்யேக பெயர்களையும் வைத்து அழைப்பதுண்டு.. அந்த பெயரை தவிர வேறு எதையாவது கூறி அழைத்தால், அன்றைய நிலவரம் கலவரமாகவே மாறிவிடும் என்பதுதான் உண்மை.
இப்படி செல்லப்பிராணிகளின் மீது மனிதர்கள் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பிற்கு எந்த எல்லையும் இல்லை என்று இதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், வியக்க வைக்கும் நிகழ்வு ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது..
கிடைத்த தகவலின் படி, சப்னா என்ற அறியப்படும் பெண் ஒருவர், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது வளர்ப்பு நாய்க்கு பிறந்தாள் விழா எடுத்துள்ளார். இதுகுறித்தான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.
சப்னா தனது வளர்ப்பு நாயின் பிறந்தநாளை ரூ. 5 லட்சம் செலவில் கொண்டாடி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, கேக் மட்டுமே ரூ 40,000 மாம்... அதோடு 300 பேருக்கு தடபுடலான விருந்து, நாய்க்கென்று அசத்தலான ஆடை - அலங்காரம், பிறந்த நாள் அழைப்பிதழ் அட்டை, விழா நடைக்கும் மண்டபத்தில் fog , டிஜே என எதற்கும் குறையே இல்லை.. இதுகுறித்தான விடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.