இரண்டு தலைகள் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை !

இரண்டு தலைகள் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை !

இரண்டு தலைகள் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை !
Published on

2 தலைகள் மற்றும் 3 கைகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபிதா(21). இவருக்கும் அஹிர்வார் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இன்று  மாவட்ட மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இரண்டு தலைகளும் 3 கைகளும் இருந்தது. 

இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, “இந்த குழந்தைக்கு 2 தலைகள் மற்றும் 3 கைக்கள் உள்ளன. எனினும் ஒரு இதயம் மட்டுமே உள்ளது. இந்தக் குழந்தைகள் தற்போது கண்காணிப்பிற்காக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தக் குழந்தையின் தாயும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்று ஒரு குழந்தை பிறந்திருப்பது மிகவும் அரிது” எனத் தெரிவித்துள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com