’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்

’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்

’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்
Published on

மாடர்ன் ஆக மாறாததால் முத்தலாக் கொடுத்ததாக, கணவர் மீது மனைவி புகார் கொடுத்துள்ளார்.

பீகாரை சேர்ந்தவர் நூரி பாத்திமா. இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு சென்றதும், மற்றவர்களை போல நவீனமாக, சிறிய உடைகளை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார், முஸ்தபா. பார்ட்டிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் அங்கு மது குடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு பாத்திமா மறுப்புத் தெரிவிக்க, தினமும் அடித்து உதைப்பாராம். அவரது கர்ப்பத்தையும் கட்டாயப்படுத்தி கலைக்க வைத்துள்ளார்.

இந்த டார்ச்சர் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பாத்திமாவை, வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இருக்கிறார் முஸ்தபா. அவர் மறுத்ததால், முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ள பாத்திமா, தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார்.

இதுபற்றி பீகார் மாநில மகளிர் ஆணைய தலைவர் தில்மானி மிஸ்ரா கூறும்போது, ‘பாத்திமாவின் கணவர் அவரைத் தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கட்டாயப்படுத்தி இரண்டு முறை அவர் கர்ப்பத்தை கலைக்கச் செய்துள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முத்தலாக் கூறி, விவகாரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரிக்க முஸ்தபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’ என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com