தகாத உறவை தட்டிக்கேட்ட மாமியார் - பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள்..!

தகாத உறவை தட்டிக்கேட்ட மாமியார் - பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள்..!

தகாத உறவை தட்டிக்கேட்ட மாமியார் - பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள்..!
Published on

தகாத உறவை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகளையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள சச்சின் என்பவருக்கும் அல்பனா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருமணமானது. இதையடுத்து சச்சின் ராணுவத்தில் பணியாற்ற சென்றதால் மனைவி அல்பனாவும் சச்சினின் தாய் சுபோத் தேவியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து அல்பனாவுக்கு மணீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து மணீஷும் அல்பனாவும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதையறிந்த மாமியார் சுபோத் தேவி அல்பனாவை கண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது காதலுக்கு இடையூராக இருந்த மாமியாரை தீர்த்துக்கட்ட மருமகள் அல்பனா, அவரின் காதலர் மணீஷ், மணீஷின் நண்பர் கிருஷ்ணா ஆகியோர் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது எனக் கருதி, 2019ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி சுபோத் தேவியை கொலை செய்துள்ளனர்.

ஒன்றரை மாதம் கழித்து அல்பனா மீது சுபோத் தேவியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்தனர். குடும்பத்தினர் அல்பனா மற்றும் மணீஷின் தொலைபேசி எண்களையும் வழங்கினர். அதன்படி ஜூன் 2 ஆம் தேதி 2 நம்பர்களுக்கு இடையே 124 கால்களும், அல்பனாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் இடையே 19 கால்களும் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த எண்களுக்கு இடையில் சில மெசேஜ்களும் பகிரப்பட்டிருந்தன.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அல்பனா அவரின் காதலர் மணீஷ், நண்பர் கிருஷ்ண குமார் ஆகியோர்தான் சுபேத் தேவியை கொலை செய்தார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com