தாய்க்கு பாலியல் வன்கொடுமை: குழந்தையை காரில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்
டெல்லியில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார் மனுவில், ஆர்.கே.மேத்தா என்பவர் எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி என்னை அழைத்தார். நான் எனது மூன்று வயது குழந்தையுடன் சென்றேன். அப்போது மேத்தாவுடன் மற்றொரு நபரும் அங்கு இருந்தார். காரில் எரியதும் எனது குழந்தையை காரில் இருந்து வெளியில் தூக்கி எரிந்தனர். பின்னர் ஓடும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், டெல்லியில் இருந்து டேராடூன் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். காரில் இருந்த இருவர் அந்த பெண்ணின் குழந்தையை வெளியில் தூக்கி எரிந்துள்ளனர். குழந்தையை மீட்ட அப்பகுதி கிராம மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அந்தப்பெண்ணை சாப்பர் பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.