‘கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை’ - போலீசில் புகார்
கத்தி முனையில் சிலர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஒடிசாவின் காளஹண்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் செப்டம்பர் 14ம் தேதி தன்னை ஐந்து, ஆறு பேர் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் கூறிய அடையாளங்களில் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக பேசியுள்ள எஸ்பி கங்காதர், பெண்ணின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும், அதன் பின்னரே காவல்துறைக்கு புகார் வந்து நடவடிக்கை எடுக்கத்தொடங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.