மும்பை தீ விபத்து: பிறந்தநாள் கொண்டாடிய இளம் பெண்கள் பரிதாப பலி
மும்பை தீ விபத்தில் பிறந்தாள் கொண்டாடி கொண்டிருந்த இளம் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை நகரின் லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் ஹோட்டல்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களும் இந்த பல அடுக்கு கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள ரெஸ்டாரெண்ட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 35 வயதிற்குட்பட்டவர்கள். இந்த பெண்களின் உடல்கள் ரெஸ்டாரெண்டின் கழிவறை அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
ரெஸ்டாரெண்டில் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் நள்ளிரவு 12 மணியளவில் பிறந்தாள் கொண்டாடி கொண்டிருந்தார். இறந்தவர்களில் 28 வயதுடைய பெண்ணை அவரது நண்பர் அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.