பிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் சென்ற பெண் - அதிர்ச்சி வீடியோ
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை காரில் சென்ற பெண், தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
குறுகலான தெரு ஒன்றில் கார் ஒன்று வருகிறது. திடீரென அந்த கார் நிற்க, காரில் இருந்த பெண் ஒருவர், பச்சிளம் குழந்தையை தெருவில் வைக்கிறார். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது. இந்த காட்சிகள் முழுவதும் அந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த கார், கிரே வண்ணத்திலான சண்ட்ரோ கார் என்று தெரிகிறது.
குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். இருப்பினும் விரைவில் குழந்தை குணமாகிவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதே போன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நடைபெற்றது. 5 நாட்களே ஆன குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.