ஹர்ப்ரீத் கவுர் ஹோரா
ஹர்ப்ரீத் கவுர் ஹோராpt web

கணவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லண்டன் புறப்பட்ட மனைவி.. விமான விபத்தில் பலியான சோகம்!

கணவரின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக லண்டன் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியாய் மாறியுள்ளது.
Published on

கணவரின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக லண்டன் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியாய் மாறியுள்ளது. ஜூன் 19ல் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், கணவரின் பிறந்தநாளுக்காக பயண திட்டத்தை மாற்றியமைத்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர மற்ற 241 பயணிகளும் உடல் கருகி இறந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகி நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

விமான விபத்து
விமான விபத்துpt web

கடந்த வியாழன் (ஜூன் 12) அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 230 பயணிகளில் இந்தூரைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கவுர் ஹோரா (30) என்பவரும் ஒருவர். ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் தனது கணவர் ராபி சிங் ஹோராவின் பிறந்தநாளைக் கொண்டாட அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் பொருட்டு ஹர்ப்ரீத் சிங் லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்தார். ராபி சிங் ஹோரா லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். ஹர்ப்ரீத்தும் பெங்களுருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றியுள்ளார்.

ஹர்ப்ரீத் ஜூன் 19 அன்று லண்டன் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஜூன் 16 கணவர் ராபியின் பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடுவதற்காக பயண திட்டத்தை முன்கூட்டியே ஜூன் 12 -க்கு மாற்றியமைத்து ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அதற்கு முன்னதாக லண்டன் புறப்படும் முன் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனது தந்தையை காண அஹமதாபாத் சென்றுள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல விமானத்தில் பயணித்துள்ளார்.

கணவரின் பிறந்தநாளுக்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என நினைத்து ஆயிரம் கனவுகளுடன் பயணத்தை திட்டமிட்டு பயணித்துள்ளார் ஹர்ப்ரீத். அவரது கணவர் ராபிக்கு மனைவியின் வருகை குறித்து இன்ப செய்தி கிடைக்கும் முன்பே அவர் இறந்துவிட்டார் என்ற பேரதிச்சி தான் கிடைத்தது. விமானம் கிளம்பிய சில நொடிகளில் விபத்து ஏற்பட்டு ஹர்ப்ரீத் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com