கணவன் இறந்த சோகம்! நொய்டாவில் 17வது மாடியில் இருந்து குதித்த பெண் மரணம்

கணவன் இறந்த சோகம்! நொய்டாவில் 17வது மாடியில் இருந்து குதித்த பெண் மரணம்

கணவன் இறந்த சோகம்! நொய்டாவில் 17வது மாடியில் இருந்து குதித்த பெண் மரணம்
Published on

உத்தரபிரதேச மாநில கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பதினேழாவது மாடியில் குடியிருந்த 45 வயதான பெண் மாடியில் இருந்து குதித்து மரணம் அடைந்துள்ளார். 

இன்று காலை பிஸ்ராக் பகுதியில் அமைத்துள்ள அந்த குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர் காவலர்கள். 

கடந்த ஆண்டு தான் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார். மீரட் மாவட்டத்தின் நீர்ப்பாசனத் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த அந்தபெண் தனது மகன் மற்றும் மருமகளுடன் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர் காவலர்கள். 

சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

பால்கனியில் இருந்து அந்த பெண் குதித்தபோது அவரது மகனும், மருமகளும் வீட்டில் இருந்தனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com