\
மும்பையில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?

மும்பையில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?

மும்பையில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?
Published on

மும்பையில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலுள்ள பாஸ்கல் வாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேகா நிஷாத். 27 வயதான ரேகாவிற்கு திருமணமாகி கணவர் மற்றும் கணவரின் சகோதரருடன் வாழ்ந்துவருகிறார். இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்துவந்துள்ளார். இவருடைய வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் ஜூலை 21ஆம் தேதி எலிகளைக் கொல்ல தக்காளியின்மீது எலிவிஷம் கலந்து வைத்துள்ளார். அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சமைத்த ரேகா, தவறுதலான எலி விஷம் கலந்துவைத்த தக்காளியையும் போட்டு சமைத்து சாப்பிட்டுவிட்டார்.

நூடுல்ஸ் சாப்பிட்ட சிலமணிநேரங்களிலேயே வாந்தி எடுக்க ஆரம்பித்த ரேகாவை அவரது கணவரும், கணவரின் சகோதரரும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரேகா புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மால்வானி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முசா தேவர்ஷி விசாரணை நடத்தியதில், அவரது இறப்பில் சதி ஏதும் இல்லை எனவும், தவறுதலான நடந்த விபத்து இறப்பு எனவும் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com