மருத்துவர்-போலீஸ் வாக்குவாதம்:  விபத்தில் சிக்கிய பெண் அலட்சியத்தால் உயிரிழப்பு

மருத்துவர்-போலீஸ் வாக்குவாதம்: விபத்தில் சிக்கிய பெண் அலட்சியத்தால் உயிரிழப்பு

மருத்துவர்-போலீஸ் வாக்குவாதம்: விபத்தில் சிக்கிய பெண் அலட்சியத்தால் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 48 வயது பெண் ஒருவர், அரசு மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

பதாவுன் மாவட்டம் பில்சி பகுதியில் ராம்வதி என்பவர், தன் மகன் மற்றும் உறவினருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, எதிரே வந்த வாகனத்தில் மோதி பலத்த காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த உறவினர் மட்டும் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்து தாயும் மகனும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். செல்போனில் பிஸியாக இருந்த மருத்துவர், காவல்துறையினரிடம் வீண் விவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இருபது நிமிடங்களுக்கு மேலாக ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டிருந்தால் உயிர்பிழைத்திருப்பார் என அவரது உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.

கோப்புப் படம் 

அரசு மருத்துவருக்கும் காவலர்களுக்கும் நடக்கும் விவாதம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. "இந்த மருத்துவரின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. விபத்தில் காயமடைந்த பெண்னுக்கு சிகிச்சை அளிக்கச் சொன்னபோது, இந்தப் பகுதியில் விபத்துகள் சகஜம் என்று அவர் கூறினார்" என்று காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com