வரதட்சணை கொடுமை | ஷார்ஜாவில் 1 வயது குழந்தையோடு கேரள பெண் எடுத்த விபரீத முடிவு!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது கைக்குழந்தையுடன் 32 பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கி கிடைத்த மலையாள மொழியில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதமும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் வயது 32. இவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிதீஷ் மோகன் என்பவரும் திருமணம் நடந்துள்ளது. திருமணமான கையோடு தனது கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற விபன்சிகா , ஜார்ஜாவில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், கடந்த ஜூலை 8 ஆம் தேதி விபன்சிகா தனது அடுக்குமாடி குடியிருப்பில், அவருடைய ஒரு வயது மகளோடு இறந்து கிடந்துள்ளார். தற்கொலை செய்து கொண்டதன் மூலம் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விபன்சிகாவுடன் தங்கியிருந்த பணிப்பெண் நீண்ட நேரம் விபன்சிகாவை அழைத்துள்ளார். ஆனால் அவர் பிளாட்டின் கதவைத் திறக்கவில்லை. பின்னர், அவர்கள் விபன்சிகாவின் கணவருக்கு போன் செய்து கதவைத் திறந்தபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அவர் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. மறுநாள் விபன்சிகாவின் ஃபேஸ்புக்கில் ஆறு பக்கம் கொண்ட தற்கொலைக் குறிப்பு வெளியுள்ளது. அதில் அவரது கணவர், அவரது தந்தை மோகனன் மற்றும் சகோதரி நீது ஆகியோர் வரதட்சணை என்ற பெயரில் அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாக துன்புறுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, தனது கணவரை பிரிந்து ஒரு வருடமாக தனிவீட்டில் விபன்சிகா தன் குழந்தையோடு தங்கியிருந்துள்ளார்.
இந்தநிலையில், தடய அறிவியல் ஆய்வில், விபன்சியாவின் குழந்தை சுவாசம் தடைப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தலையணையால் அழுத்தி சிறுமியை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், விபன்சிகா தற்கொலை செய்திருக்கும்பட்சத்தில் அவருக்கு முன்பே இக்குழந்தையை கொன்றிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, விபன்சியா இறந்த இடத்தில், போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியநிலையில், ஆறு பக்கத்தில் தற்கொலை கடிதம் மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்பு அதாவது கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது.
அதில், விபன்சியாவிற்கு நேர்ந்த மனஅழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தநிலையில், மரணமடைந்த விபன்சியாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் விபன்சியாவின் கணவர் நிதிஷ் வலியவீட்டில் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்களின் மகளை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
விபன்சிகாவின் தாயார் சியாமளா கூறும்போது, திருமணம் முடிந்ததும், வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக நிதிஷ் தொல்லை கொடுத்து வந்ததாகவும், விபன்சிகா சிவப்பாக இருப்பதாகவும் நிதிஷ், அவருடைய குடும்பத்தினரும் சற்று நிறம் குறைவாக இருப்பதால் விபன்சியா அழகாக தெரியக்கூடாது என்று அவளுடையை முடியை வெட்டி, மொட்டை அடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
பல பெண்களோடு நிதீசுக்கு தொடர்பு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பேத்தி வைபவியை உடலளவில் நிதீஷ் துன்புறுத்தினார் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஷார்ஜாவின் அல் நாடா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில மாதங்களாக விபன்சிகா தனியாக வசித்து வந்திருக்கிறார். ஆனால், நிதீஷ் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து கொடுத்த தொல்லையை பொறுக்க முடியாமல் விபரீத முடிவை அவள் எடுத்து விட்டாள் என விபன்சிகாவின் பெற்றோர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிதீஷ், அவருடைய சகோதரி நீத்து பெனி மற்றும் நிதீஷின் தந்தை ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என புகார் தெரிவிக்கின்றது. இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.