முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸை ஆர்வமுடன் பார்த்த கணவர்; ஆத்திரத்தில் இரண்டாவது மனைவி செய்த செயல்!

முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸை பார்த்து ரசித்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார் இரண்டாவது மனைவி.
Instagram reels
Instagram reelsFile Image

ஆந்திரா மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த் பாபு (வயது 26). அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து, வீரம்மா (வயது 25) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

crime
crimeFreepik

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆனந்த் பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை மிகவும் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். தனது கணவர் அவரது முதல் மனைவியின் வீடியோவை பார்த்து ரசிப்பதை கண்டு இரண்டாவது மனைவி வீரம்மா கடும் ஆத்திரம் அடைந்தார். இதுகுறித்து வீரம்மா கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா தனது கணவனின் ஆணுறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.

இதனால் வலி தாங்கமுடியாமல் அலறியுள்ளார் கோட்டா ஆனந்த் பாபு. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்த்பாபுவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்காயங்களை தைத்த பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com