குடும்பம் கூடி வாழ்த்த, பெண்ணை மணந்தார் பெண்!

குடும்பம் கூடி வாழ்த்த, பெண்ணை மணந்தார் பெண்!

குடும்பம் கூடி வாழ்த்த, பெண்ணை மணந்தார் பெண்!
Published on

பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள பக்கா பாஹ் பகுதியை சேர்ந்தவர், மஞ்சித் சாந்து (44). அரசு அலுவலகம் ஒன்றில் வார்டனாக வேலை பார்த்துவரும் இவர், தனது காதலியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வீட்டில் கூறினார். முதலில் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் பெண்ணான மஞ்சித் காதலிப்பது இன்னொரு பெண்ணை! மஞ்சித் அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று வற்புறுத்தியதால் இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் புடை சூழ, கடந்த 22-ம் தேதி இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் பற்றிய புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுபற்றி மஞ்சித் சாந்து கூறும்போது, ’இது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. மீடியா தேவையில்லாமல் அதில் நுழைகிறது’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com