3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள் - உலக சாதனைப் படைத்த கேரளப் பெண்

3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள் - உலக சாதனைப் படைத்த கேரளப் பெண்
3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள் - உலக சாதனைப் படைத்த  கேரளப் பெண்

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊரடங்கு நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலகச் சாதனைப் படைத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ரகுநாத் மற்றும் கலாதேவி ஆகியோரின் மகள் ஆரத்தி. வேதியியல் பாடப்பிரிவில் இராண்டாம் ஆண்டு முதுகலை பட்டம்  பயின்று வரும் இவர் கடந்த மூன்று மாதங்களில் தனது நேரத்தை பயனுள்ள விதமாக கழிக்கும் வகையில் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது “ எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர்தான் எனக்கு ஆன்லைன் படிப்பு உலகத்தை அறிமுகப்படுத்தினார். அங்கு அதிகமான படிப்புகள் உள்ளன. அவை காலநேரத்திலும், பாடத்திட்டத்திலும் வேறு பட்டு காணப்படுகின்றன. எனது கல்லூரி தலைமை ஆசிரியர் அஜிம்ஸ் பி முஹம்மது, ஆசிரியர் நீலீமா மற்றும் ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆகியோர் எனக்கு உதவிகரமாக இருந்தனர்.

உலக நாடெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைகழகங்களில் ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்திருக்கும் ஆரத்தியை நினைத்து பெருமிதம் கொள்வதாக அவரது பெற்றோர் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com