’அம்மாவை அப்பா அடிச்சார், அத்தை கெரசின் ஊத்தினாங்க, பாட்டி தீ வச்சாங்க’- சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

’அம்மாவை அப்பா அடிச்சார், அத்தை கெரசின் ஊத்தினாங்க, பாட்டி தீ வச்சாங்க’- சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

’அம்மாவை அப்பா அடிச்சார், அத்தை கெரசின் ஊத்தினாங்க, பாட்டி தீ வச்சாங்க’- சிறுமியின் பகீர் வாக்குமூலம்!
Published on

முத்தலாக்-கிற்கு எதிராக புகார் சொன்ன இளம் மனைவியை குடும்பத்தினருடன் சேர்த்து எரித்துக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ் (26). இவர் மனைவி சாயிஷா. இவர்களுக்கு 5வயதில் பாத்திமா என்ற மகள் இருக்கிறார். நபீஸ், மும்பையில் வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன், போனில், முத்தலாக் கூறினார் மனைவியிடம். இதுபற்றி கடந்த 6 ஆம் தேதி போலீசில் புகார் செய்தார் சாயிஷா. 

வழக்குப் பதிவு செய்யாத போலீசார், கணவர் வந்ததும் அவரை அழைத்துவரும்படி கூறினர். கடந்த 15 ஆம் தேதி ஊருக்கு வந்த நபீஸ், முத்தலாக் கூறிவிட்டதால், அவரது வீட்டுக்குச் செல்லும்படி சாயிஷாவை கூறியிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சாயிஷாவை தாக்கினார், நபீஸ். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த நபீஸின் அப்பா அசிஸூல்லா, பாட்டி ஹசீனா, சகோதரிகள் நாதிரா, குடியா ஆகியோர் வந்தனர். 

சாயிஷாவின் தலைமுடியை பிடித்து நதீஷ் தாக்க, நாதிரா, சாயிஷா மீது கெரசின் ஊற்றினார். அசிஸுல்லாவும் ஹசீனாவும் தீக்குச்சியை உரசி அவர் மீது எறிந்தனர். இதையடுத்து அவர் உடலில் தீப்பற்றியது. அவர் அலறித் துடித்தார். அவர்கள் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். இது அனைத்தும் சாயிஷாவின் 5 வயது மகள் பாத்திமாவின் கண்முன்னாலயே நடந்திருக்கிறது. 

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சாயிஷாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.  அப்போது சிறுமி பாத்திமா, தன் கண்முன் நடந்த சம்பவங்களை, வாக்குமூலமாக அப்படியே ஒப்பித்தார். உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சாயிஷாவின் சகோதரர் ரபீக் கூறும்போது, ‘’குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட இருக்கி றேன்’’ என்றார். 

காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ஸ்ரீவத்ஸா கூறும்போது, ‘’வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடி வருகிறோம். முத்தலாக் பற்றி புகார் கொடுத்தும் அதை பதிவு செய்யவில்லை என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

முத்தலாக் கூறிய கணவர் மீது புகார் சொன்ன மனைவி, உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com