இந்தியா
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்... பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்... பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது, ஆனால் அவரது சேதப்படுத்தப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது./p>
அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசித்த ஒருவர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதாகவும், அந்தப் பெண் மறுத்துவிட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். இதனால் கடந்த 9-ம் தேதி தமது நண்பர்களுடன் இணைந்து அந்த நபர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வில் இந்த கொடூர சம்பவத்தில் குறைந்தது 7 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.