\
துப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

துப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

துப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
Published on

துப்பாக்கி முனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள சிலோன் ஆறு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் வழி மறித்தனர். பின்னர் அந்தக் குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை இழுத்துத் தனியாக நிறுத்தினர். மற்றவர்களை தனியாக ஓர் இடத்தில் அமர வைத்தனர். அதில் ஒரு சகோதரி மைனர். 

பின்னர் துப்பாக்கி முனையில் அவர்களை அந்த இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், மறுப்பு தெரிவித்து போராடிய, மூத்த சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி பிர்புர் பகுதி ஏஎஸ்பி, ராம்நாத் குமார் கவுசல் கூறும்போது, ’செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இது சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com