வேளாண் சட்டங்கள் வாபஸ்: தமிழக தலைவர்கள் வரவேற்பு

வேளாண் சட்டங்கள் வாபஸ்: தமிழக தலைவர்கள் வரவேற்பு
வேளாண் சட்டங்கள் வாபஸ்: தமிழக தலைவர்கள் வரவேற்பு

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளை இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என அறிவித்த மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளை இங்கு பார்க்கலாம்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி, தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கதக்க அறிவிப்பு - கே.பாலகிருஷ்ணன்

பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறேன், ஆனால், இது தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாக நான் பார்க்கிறேன் - ப.சிதம்பரம்

இன்றைய சூழலை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது - வானதி சீனிவாசன்.

விவசாயிகளின் நீண்டகால பிரச்னையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே போராட்டத்தின் பின்னணியில் இருந்தன - பொன் ராதாகிருஷ்ணன்.

தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் - தொல்.திருமாவளவன்.

மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி, ஜனநாயகத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய வெற்றி - எம்பி. கனிமொழி.

விவசாயிகளின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பிரதமர் சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது இந்திய விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. - அமைச்சர் கேஎன்.நேரு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com