ஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு!

ஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு!

ஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு!

ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்ய, கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி ஹனன் ஹமீது முடிவு செய்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்ப னை செய்து வந்தார். இவர் பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. அவரை அவதூறாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிக ளில், சிறப்பு விருந்தினராகவும் அவர் அழைக்கப்படுகிறார்.

 இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், கடந்த 3 ஆம் தேதி பங்கேற்றார் ஹனன். நிகழ்ச்சி முடிந்து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் குணமாகி வரும் அவர், வீல் சேர் மூலம்தான் வீட்டுக்குள் சென்றுவருகிறார்.

இந்நிலையில் அவர் ஆன்லைன் மூலம் மீன் விற்க முடிவு செய்துள்ளார். தெருவில் வைத்து மீன் விற்ற இவர், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மீன் விற்க முடிவு செய்திருந்தார். இதற்காக எர்ணாகுளம் அருகில் உள்ள தம்மனம் பகுதியில் ஒரு கடையை பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தார். கடை உரிமையாளருக்கும் அவர் உறவினர்களுக்கு ஏதோ பிரச்னை. இதையடுத்து உரிமையாளரின் உறவினர்கள் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த திட்டத்தை கைவிட்டார் ஹனன். 

இதையடுத்து ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘உடல் நலம் இன்னும் முழுமை யாக குணமாகவில்லை.  மீன்களை வாங்கி சுத்தம் செய்து, பிறகு ஆன்லைன் மூலம் அதை விற்பனை செய்ய முடிவு செய்து ள்ளேன். வியாபார போக்குவரத்துக்காக வாகனம் ஒன்றையும் வாங்க இருக்கிறேன். இந்த பிசினஸூக்காக டெக்னிக் கல் ஆலோசனையையும் கோரியுள்ளேன்’ என்றார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com