மகாராஷ்டிரா: கொரோனாவால் இறந்த தாயை தோளில் தூக்கிக்கொண்டு இடுகாட்டிற்கு சென்ற மகன்

மகாராஷ்டிரா: கொரோனாவால் இறந்த தாயை தோளில் தூக்கிக்கொண்டு இடுகாட்டிற்கு சென்ற மகன்

மகாராஷ்டிரா: கொரோனாவால் இறந்த தாயை தோளில் தூக்கிக்கொண்டு இடுகாட்டிற்கு சென்ற மகன்
Published on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் சடலத்தை தகனம் செய்ய அதிகாரிகள் யாரும் முன்வராத காரணத்தால் சடலத்தை பெற்ற மகனே தோளில் தூக்கிக்கொண்டு இடுகாட்டிற்கு சென்ற சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் பஞ்சாயத்தைச் (Bhangwar Panchayat) சேர்ந்தவர் வீர்சிங். இவரது தாய்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீர்சிங் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியில்லாததால் தாயை மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை. அதனைத்தொடர்ந்து தாய் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை காலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

உயிரிழந்த தாயை அடக்கம் செய்ய அதிகாரிகள் யாரும் முன்வராத காரணத்தால், வீர்சிங் தனது தாயின் சடலத்தை தோளில் தூக்கிக்கொண்டு இடுகாட்டிற்கு சென்றிருக்கிறார். இது குறித்து வீர் சிங் கூறும் போது, “ தாய் இறந்தது குறித்து பஞ்சாயத்து தலைவர் சூரம் சிங்கிற்கு தகவல் கொடுத்து உதவிக்கேட்டேன். அவர் சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு தேவையான வாகனத்தை கூட ஏற்பாடு செய்யவில்லை. கிராமத்தில் இருந்தும் உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. ஆகையால் நான், ஆஷா பணியாளர் ஒருவரின் உதவியுடன் பிபிஇ கிட்டை வாங்கி அணிந்துக்கொண்டு, சடலத்தை தோளில் தூக்கிக்கொண்டு இடுகாடு சென்றேன்” என்றார்.

இது பஞ்சாயத்து தலைவரிடம் கேட்ட போது, “ வீர்சிங் உதவி கேட்டதையடுத்து 2 டிராக்டர் உரிமையாளர்களிடம் பேசினேன். ஆனால் அவர்களோ கொரோனா அச்சம் காரணமாக வரமறுத்துவிட்டனர். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீர்சிங்கின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் கிராமவாசிகளிடம் இந்தச்சம்பவம் குறித்து கூறி வீர்சிங்கிற்கு விறகுகட்டைகளை ஏற்பாடு செய்ய வலியுறுத்தினேன்” என்றார்.

இது குறித்து கன்கிரா காங்கிரஸ் எம்.எல். ஏ கூறும் போது, “இந்தச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை காலைதான் கேள்விப்பட்டேன். கொஞ்சம் முன்னதாக தெரிந்திருந்தால் அவருக்கு நான் உதவியிருப்பேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com