அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மதியம் உயிரிழந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா தலைவருமான அருண் ஜெட்லியின் உடல், அவரது கைலாஷ் காலனி வீட்டில் இருந்து ராணுவ வாகனத்தில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிற்பகல் 2.30 மணி வரை கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். 

பின்னர், ஜெட்லியின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் அக்கட்சியின் எம்பிக்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com