5 மாதங்களில் 15 ரயில் தீ விபத்து சம்பவங்கள்: பயணிகள் அச்சம்
நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களில் மட்டும் 15 ரயில் தீ விபத்து சம்பவம் நடைபெற்றிருப்பது ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வெளியூர் பயணங்களுக்கு சாமானிய மக்களின் முதன்மைத் தேர்வாக அமைவது ரயில் பயணம்தான். பேருந்துகளை விட குறைவான கட்டணம், பாதுகாப்பு இருக்கும் என்ற நோக்கில் பொதுமக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களில் மட்டும் 15 ரயில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்றிருப்பது ரயில் பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் தண்டவாளங்களை முறையாக பராமரிக்காமல் விடுதல், முறையான மேற்பார்வை இல்லாத காரணங்களால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் கடிதம் எழுதியுள்ளது. ஊழியர்களின் மெத்தனப்போக்கை இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் தோலூரித்து காட்டுவதாகவும் ரயில்வே வாரியம் சாடியுள்ளது.