ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: இடம் பிடித்த இந்தியர்கள்

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: இடம் பிடித்த இந்தியர்கள்

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: இடம் பிடித்த இந்தியர்கள்
Published on

ஆசியாவின் பெரும் பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.

ஓரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 24 சதவிகிதம் வரை உயர்ந்து, சுமார் 78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் புதிய கோடீஸ்வரர் என்ற பெயரை நைகா நிறுவனர் ஃபல்குனி நாயர் பெற்றிருப்பதாக hurun என்ற சர்வதேச பணக்காரர்கள் பட்டியல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். ஓரே ஆண்டில் அவருக்கு கணிசமான அளவுக்கு சொத்துகள் சேர்ந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் ஒவ்வொரு வாரமும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவரது வருவாய் அதிகரித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com