ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. எங்கெல்லாம் கிடைக்கிறது 5G சேவை?

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. எங்கெல்லாம் கிடைக்கிறது 5G சேவை?
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. எங்கெல்லாம் கிடைக்கிறது 5G சேவை?

இந்தியாவில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கூடுதலாக மூன்று நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அகமதாபாத், காந்தி நகர், இம்பால் ஏர்டெல் தனது 5ஜி சேவையை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம், தனது 5ஜி நெட்வோர்க் சேவையை நாட்டில் வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இப்போது அகமதாபாத், காந்தி நகர், இம்பால் ஆகிய நகரங்களில் செயல்பாட்டுக்குக்  கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகாம் ஆப்பரேட்டர், NSA (Non Standalone) தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்குகிறது.

தற்போதைக்கு இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜியை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் இது மட்டுமே. ஏர்ட்டெல்லின் போட்டி நிறுவனமான ரிலயன்ஸ் ஜியோ, அதன் 5ஜி சோதனைகளை எப்போது முடிக்கும் என்று இன்னும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் மற்றும் காந்தி நகரில் ஏர்டெல் 5ஜி:

அதிவேக 5ஜியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்த நிறுவனம், அதன் செயல்பாட்டுக்களை அகமதாபாத், SG ஹைவே, மேம்நகர், செட்டிலைட், நவ்ரங்புரா, சாபர்மதி, மோடேரா, சந்த்கேதா, தெற்கு போபால், கொம்டிபூர், மேம்கோ, பப்புநகர் மற்றும் காந்திநகரில் கோபா, ராசன், சாகசன், பேதபூர் மற்றும் சில முக்கிய இடங்களில் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்பாலில் ஏர்டெல் 5ஜி:

அதேபோல மணிப்பூரின் இம்பாலின் அகம்பட், வார் சிமெட்ரி, தேவ்ல்லேண்ட், டாகேல்பட், புதிய செயலாளர் அலுவலகம், பபுரா, நாகரம், காரி, யுரிபோக், சாகோல்பேண்ட் மற்றும் சில இடங்களில் 5ஜி இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நவம்பரில், ஏர்டல் 5ஜியை தனது விரிவாக்கத்தை கவ்காத்தியில் அறிவித்தது. இது தனது ஐந்தாம் தலைமுறை நெட்வோர்க்கை வடகிழக்கு பகுதியில் துவங்கியது.

தற்போது 5ஜி செயல்பாட்டில் இருக்கும் இடங்கள்:

ஐதராபாத், சென்னை, டெல்லி, மும்பை. பெங்களூரு, சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபேட், குருகிராம், கவ்காத்தி, பாட்னா, லக்னோ, சிம்லா, இம்பால், அகமதாபாத், காந்தி நகர்

ஏர்டெல் 5ஜி இயக்கப்பட்ட நகரங்களில் வசிக்கும் பயனர்கள் தங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அதிவேக 5ஜி இணையம் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த முடியும். பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5ஜி இணைப்பை ஆதரிக்க சாஃப்ட்வேர் அப்டேட்டைத் தந்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் கூட சமீபத்தில் iOS 16.2 புதுப்பித்தலுடன் 5G ஆதரவை வெளியிட்டது. 5ஜியைப் பயன்படுத்த பயனர்கள் புதிய சிம் வாங்க வேண்டியதில்லை என்று டெலிகாம் ஆபரேட்டர்கள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர். அவர்களின் 4G சிம்மை வைத்தே 5ஜி இணைப்பை எளிதில் பெற முடியும்.

- ஷர்நிதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com