இந்தியா
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்: அமைச்சர் வரவேற்பு
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்: அமைச்சர் வரவேற்பு
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபோன் தொழிற்சாலை இந்தியாவில் அமைய இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இதற்கான திட்ட அறிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதில் மகிழ்ச்சி. ஐஃபோன் தொழிற்சாலை அமைப்பதில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏதாவது சிரமங்கள் இருந்தால் அதைக் களைவதில் உதவி செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.