சிவசேனாவுக்கு பச்சை கொடி காட்டும் தேசியவாத காங்கிரஸ்

சிவசேனாவுக்கு பச்சை கொடி காட்டும் தேசியவாத காங்கிரஸ்
சிவசேனாவுக்கு பச்சை கொடி காட்டும் தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேன கூட்டணி ஆட்சியமைக்காவிட்டால் நாங்கள் ஆட்சியமைக்க முயல்வோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேன கட்சி 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதாவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியும், 50 சதவிகிதம் அமைச்சர் பதவியும் தரவேண்டும் என சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள பாரதிய ஜனதா, தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் எனக்கூறி வருகிறது.

சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என கூறிய அதேவேளையில் மகாராஷ்டிராவில் நவ. 7 ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு செல்லும் என பாஜகவின் மூத்த தலைவரும் எம்பியுமான சுதிர் முங்கன்திவார் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேன கூட்டணி ஆட்சியமைக்காவிட்டால் நாங்கள் ஆட்சியமைக்க முயல்வோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

மேலும், “எந்தவொரு கட்சியும் எனக்கு தீண்டதகாதவை அல்ல. பாஜக ஆளுநர் ஆட்சியைப் பற்றி பேசுகிறது. ஆனால் அதற்காக தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாத சிவாஜியின் சித்தாந்தத்தை சிவசேனா பின்பற்றியது. நாங்கள் ஒருபோதும் பாஜகவை ஆதரிக்கமாட்டோம். நாங்கள் எதிர்கட்சியில் அமர தயாராக இருக்கிறோம். அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வருகிறது. அதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com