'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி !

'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி !

'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி !
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக கடந்த சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இதனைதொடந்ந்து பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். பெண்களை வெளியேற்றக்கோரி பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ஓரளவுக்கு சபரிமலை சந்நிதானத்தில் நீடித்த பதற்றமான சூழ்நிலை சற்றே குறைந்தது. மேலும், கேரள அரசு விரதங்கள் கடைப்பிடிக்காமல் வரும் பெண்ணியவாதிகள், பெண் பத்திரிகையாளர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கவும் என்று கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் சபரிமலைக்கு சுவாமி தரசினம் செய்ய வந்த சிறுமிகள் சிலர் தங்கள் பதாகைகளை ஏந்தி வந்தனர். இதில் இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த 9 வயது சிறுமி தன் கையில் பதாகை ஒன்றை ஏந்தியிருந்தார். அதில் " எனக்கு 9 வயதாகிறது. நான் இதுவரை மூன்று முறை சபரிமலைக்கு வந்துள்ளேன். இதற்கு பின்பு நான் 41 ஆண்டுகள் கழித்துதான் சபரிமலைக்கு வருவேன்" என எழுதியிருந்தேன். அந்தச் சிறுமி சென்னையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேபோல மதுரையை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரும் கையில் பதாகை ஒன்றை வைத்திருந்தார் அதில் தற்போது தனக்கு ஒன்பது வயது என்றும், 50 வயது கடந்த பிறகே தாம் அடுத்த முறை சபரிமலைக்கு வருவேன் என்றும் அந்த அறிவிப்பு பதாகையில் இடம்பெற்றது. இதனை ஏந்தியபடி சபரிமலையில் இருந்து பம்பை சென்றார்.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com