இந்தியா
பிரதமர் மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி
பிரதமர் மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி
பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் நானும் அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
புனேவில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரிடம் ஸ்மிருதி இரானியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, ’’சிறந்த தலைவர்களுக்கு கீழ் அரசியலில் பணியாற்றி இருக்கிறேன். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையின் கீழ் பணியாற்றியது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். பிரதமர் மோடி அரசியலை விட்டு ஓய்வு பெறும்போது, நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன். அமேதி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறார்கள். அதை, தலைவர் அமித் ஷாதான் முடிவு செய்தார்’’ என்றார்.

