“மனைவிக்கு வாழ்வாதாரம்.. காங்கிரஸின் திட்டம்..” - கணவரின் பதிலால் வியந்துபோன நீதிமன்றம்

“மனைவிக்கு வாழ்வாதாரம்.. காங்கிரஸின் திட்டம்..” - கணவரின் பதிலால் வியந்துபோன நீதிமன்றம்

“மனைவிக்கு வாழ்வாதாரம்.. காங்கிரஸின் திட்டம்..” - கணவரின் பதிலால் வியந்துபோன நீதிமன்றம்
Published on

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிடைக்கும் ரூ.6,000 உதவித்தொகையை பிரிந்த மனைவிக்கு வாழ்வாதாரமாக அளிப்பதாக கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் ஆனந்த் ஷர்மா. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு தீப்மாலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியிக்கு ஆர்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் குடும்ப பிரச்னை காரணமாக அதன்பின்னர் பிரிந்துவிட்டனர். தனது கணவரை பிரிந்துவிட்டதால் வாழ்வாதாரம் இல்லையென்றும், எனவே தனக்கும் தனது மகளுக்கும் கணவர் வாழ்வதார தொகை வழங்க வேண்டும் எனவும் தீப்மாலா இந்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவிக்கும், மகளுக்கும் வாழ்வாதாரம் வழங்குவது தொடர்பாக ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், “நான் வேலையின்றி இருக்கிறேன். அதனால் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளேன். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தரும் ரூ.6,000 உதவித்தொகையை வாங்கி, அதை அப்படியே எனது மனைவியின் வங்கிக் கணக்குக்கு அனுப்புவேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆனந்தின் பதிலை ஏற்றுக்கொண்டனர். 

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் வருகையொட்டி ராகுல் காந்தி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். அதில், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வருடம் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த திட்டம் சாத்தியமா? சாத்தியமற்றதா? என்று பல விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com