உ.பி.: ’I-N-D-I-A கூட்டணி உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்’ - அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் I-N-D-I-A கூட்டணி உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
india alliance
india allianceட்விட்டர்

I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதான கட்சியாக உள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். அகிலேஷ் யாதவின் அறிவிப்பு I-N-D-I-A கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சஹரான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 'I-N-D-I-A கூட்டணி கட்சியினருக்கு உத்தரப்பிரதேச தேர்தலில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படும்’ என தெரிவித்தார். ’I-N-D-I-A கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான் என தெரிவித்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியுடன் இதற்குமுன் கூட்டணி அமைத்தவர்களும் ஏமாற்றம் அடைந்ததில்லை. எதிர்காலத்திலும் ஏமாற்றம் அடையமாட்டார்கள்’ எனவும் கூறினார்.

இதையும் படிக்க: அமெரிக்கா: ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி!

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.

இதற்குப் பின் போபாலில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக I-N-D-I-A கூட்டணியின் கூட்டம் நடைபெறாத நிலையில் அடுத்த கூட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: "உங்களுக்கெல்லாம் முடிதிருத்த முடியாது" - பட்டியலின இளைஞர்கள் விரட்டியடிப்பு... சீறிய தாசில்தார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com