"மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது குறித்து பரிசீலிப்பேன்" - ராகுல் காந்தி

"மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது குறித்து பரிசீலிப்பேன்" - ராகுல் காந்தி

"மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது குறித்து பரிசீலிப்பேன்" - ராகுல் காந்தி
Published on

மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது குறித்து பரிசீலிப்பதாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உட்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து ராகுல்காந்தி இதனை தெரிவித்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவரது ராஜினாமா கட்சிக்குள் ஒரு நெருக்கடியை உருவாக்கியது, அதன்பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதன்பின்னர் ஜி 23 எனப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதமும் காங்கிரஸ்க்கு நெருக்கடியை உருவாக்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com