சூடுபிடிக்கும் கோவா தேர்தல் களம் - குறிப்பிட்ட சில கட்சிகளை தவிர்க்கும் காங்கிரஸ்..ஏன்?

சூடுபிடிக்கும் கோவா தேர்தல் களம் - குறிப்பிட்ட சில கட்சிகளை தவிர்க்கும் காங்கிரஸ்..ஏன்?
சூடுபிடிக்கும் கோவா தேர்தல் களம் - குறிப்பிட்ட சில கட்சிகளை தவிர்க்கும் காங்கிரஸ்..ஏன்?

மகாராஷ்ட்ராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கோவாவில் தனித்துப் போட்டியிடுகிறது. 

40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 14-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகின்றது. தற்போது, ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா, 34 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தில் முந்திக்கொண்டுள்ளது. முதன்முதலாக கோவா தேர்தலில் களம் காணும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டது. இதுபோன்ற சூழலில், கூட்டணி அமைத்து போட்டியிட வருமாறு விடுத்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததால் திரிணாமுல் காங்கிரஸும் தனித்து போட்டியிடுகிறது.

மகாராஷ்ட்ராவில் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்த காங்கிரஸ், அவ்விரு கட்சிகளுடன் கோவாவில் இணைந்து போட்டியிட விரும்பவில்லை. இதனை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களே உறுதி செய்துவிட்டனர்.

ஒரு சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் விரும்பாததற்கு, கடந்த காலங்களில் அக்கட்சி சந்தித்த கசப்பான அனுபவங்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று கட்சி கண்டவர்கள், காங்கிரஸ் ஆதரவுடன் வளர்ந்த கட்சிகள் பின்னர் தங்களுக்கு எதிராகவே திரும்பியது போன்றவற்றால் பாடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ் கோவாவில் தனித்துப் போட்டியிடவே விரும்புவதாக தெரிகிறது. இதுதவிர, கோவா அரசியலின் தற்போதைய சூழல் காங்கிரஸூக்கு சாதகமாக இருப்பதாக கருதும் காங்கிரஸ், யாருடைய ஆதரவுமின்றி தனித்து ஆட்சியமைத்துவிட முடியும் எனவும் திடமான நம்பிக்கை கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com