பேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

பேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

பேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை
Published on

மக்கள், உத்தரவைக் கடைபிடிக்கவில்லை என்றால் மிகக் கடுமையான நடவடிக்கையாக கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தா‌க உயிரி‌ழந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது.

இந்திய அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களிடையே நேற்று பேசிய
மோடி, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் மக்கள் ஊரடங்கை முறையாக பின்பற்ற வேண்டுமென்றும், உத்தரவைக் கடைபிடிக்கவில்லை என்றால் மிகக்கடுமையான நடவடிக்கையாக கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36ஆக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர், மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். போலீசாரின் பேச்சைக் கேட்காமல் உத்தரவுகளை அவமதித்தால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டி வரும். அப்படியும் மக்கள் கேட்கவில்லை என்றால், ராணுவத்தை இறக்க வேண்டி வரும். இது தேவையா? நாம் நிலைமையை இன்னும் மோசமாக்கக் கூடாது. மக்கள் சிந்திக்க வேண்டும். கொரோனா பிரச்னையை தீவிரமாக எடுத்துக்கொண்டு மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com