இந்தியா
ஒடிசாவில் பேருந்தை தள்ளிக்கொண்டு சென்று பரபரப்பை ஏற்படுத்திய யானை - மிரண்டுபோன பயணிகள்
ஒடிசாவில் பேருந்தை தள்ளிக்கொண்டு சென்று பரபரப்பை ஏற்படுத்திய யானை - மிரண்டுபோன பயணிகள்
ஓடிசாவில் யானையொன்று பேருந்தை தள்ளியபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசாவில் யானை ஒன்று, பேருந்தை தள்ளியபடியே சென்றதால், பயணிகள் அச்சமடைந்தனர். மயூர்பஞ்ச் (MAYURBHANJ) மாவட்டத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்னால், தள்ளிக்கொண்டே அந்த யானை சென்றது. இதனால் பேருந்தில் இருந்தவர்களும், அங்கிருந்த பொதுமக்களும் அச்சமடைந்தனர். ஓட்டுநர், பேருந்தை வேகமாக இயக்கிச் சென்று, பயணிகளை காப்பாற்றியதால் சேதமேதுமின்றி துரிதமாக மக்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.
பேருந்தின் கண்ணாடி மட்டும் இந்தச் சம்பவத்தில் உடைந்திருக்கின்றது. இந்தக் காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்திருந்த நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.