\
கணவர் தின்பண்டம் வாங்கச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் - உ.பி.யில் பயங்கரம்

கணவர் தின்பண்டம் வாங்கச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் - உ.பி.யில் பயங்கரம்

கணவர் தின்பண்டம் வாங்கச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் - உ.பி.யில் பயங்கரம்
Published on

உத்தர பிரதேசத்தில் ரயிலுக்கு காத்திருந்த போது கணவன் தின்பண்டம் வாங்க போன நேரத்தில், மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு ரயில் ஏறுவதற்காக கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். ரயில் வர தாமதமானதால் அவர்கள் இருவரும் காத்திருப்பு அறையில் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சாப்பிட தின்பண்டம் வாங்கி வருகிறேன் என்று மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில், காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு அந்த பெண் சென்றுள்ளார். இதனை கவனித்த கழிவறையை தூய்மை செய்யும் ஊழியர் யாருக்கும் தெரியாமல் கழிவறைக்குள் நுழைந்துள்ளார்.

கழிவறைக்குள்ளே சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த ஊழியர். இதன்பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோடி விட்டார். நடந்த சம்பவம் பற்றி தனது கணவரிடம் அந்த பெண் கூறி அழுதுள்ளார். கணவன் மனைவி இருவரும் நிகழ்ந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். “காத்திருப்பு அறையின் கழிவறையில் நடந்த சம்பவம் பற்றி அந்த பெண் எங்களிடம் கூறினார். அந்த விவரங்களை நாங்கள் சேகரித்து கொண்டோம். தேவையான அனைத்து விசாரணை நடைமுறைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்’ என காவல்துறை அதிகாரி அபய் பாண்டே தெரிவித்தார். ரயிலுக்கு காத்திருந்த இடத்தில் கணவன் தின்பண்டம் வாங்கச் சென்ற இடைவெளியில் அவரது மனைவிக்கு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com