பீகார்: மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்; அந்த நான்கு வருட நாட்கள்...

"மாதவனோ வசந்தியிடம், நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். ஆனால் உன் கணவன் கட்டிய தாலியை கழட்டி எறிந்துவிட்டு வா..." என்பார்.
திருமணம்
திருமணம்PT

பாக்கியராஜ்- அம்பிகா நடித்த தமிழ் திரைப்படம் அந்த 7 நாட்கள். இது 1981-ல் வெளிவந்து மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. காரணம் அத்திரைப்படத்தின் முடிவு. அதில் வசந்தி கதாபாத்திரத்தில் அம்பிகாவும், பாலகாட்டு மாதவன் கதாபாத்திரத்தில் பாக்கியராஜும் நடித்திருப்பார்கள்.

இதில் வசந்தியும் மாதவனும் காதலித்து வந்த நிலையில் ஒரு இக்கட்டான சூழலில் வசந்திக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிடும். திருமணம் நடந்தாலும் வசந்தி, மாதவனை மறக்காமல் அவரின் நினைவாகவே இருப்பார்.

ஒரு கட்டத்தில் வசந்தியின் கணவனுக்கு இவர்களின் காதல் தெரியவர, வசந்தி மகிழ்சியாக இருக்க வேண்டும் என நினைத்து அவள் காதலித்த மாதவனை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்துவார் அவரது கணவர். மாதவனோ வசந்தியிடம், நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்.ஆனால் உன் கணவன் கட்டிய தாலியை கழட்டி எறிந்துவிட்டு வா... என்பார். ஆனால் வசந்தி அவ்வாறு செய்யாமல் மனம் மாறி தன் கணவனுடனேயே வாழ்கையை வாழ்வதாக படத்தை முடித்திருப்பார்கள்.

அந்த 7 நாட்கள்
அந்த 7 நாட்கள்

இப்படத்தின் முடிவிற்காகவே மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு, வசந்தியின் செயலை பாராட்டி பேசி வந்தனர். இதேபோல் ஒரு நிகழ்வு இந்தியாவில் உள்ள பெகுசராய் கிராமத்தில் நடந்துள்ளது. ஆனால் வசந்திபோல அந்தப் பெண் கணவனுடன் வாழாமல், தனது காதலனுடன் சென்றது தான் ஹைலைட். சரி என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் வசித்து வருபவர் அஜய்குமார்( 24). இவருக்கு காஜல்(22) என்பவருடன் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில், திருமணத்திற்கு முன்பே காஜல் தனது கிராமமான ஆகாபூரில் வசித்து வந்த ராஜ்குமார் தாக்கூர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காஜலுக்கு அஜய்குமாருடன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையிலும் ராஜ்குமாரும் காஜலும் தங்களின் காதலை தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு கட்டத்தில் அஜய்குமாருக்கு தெரியவந்துள்ளது.

தனது மனைவி ஊர் முன்னிலையில் அவமானப்படுவதை விரும்பாத அஜய்குமார், தனது உறவினர்களுக்கு காஜலின் காதலை புரியவைத்து அவர்களின் சம்மதத்துடன் தனது மனைவியை ராஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

web

இவர்களின் இச்செயல் அக்கிராமத்து பஞ்சாயத்திற்கு வந்துள்ளது. இருப்பினும் அஜய்குமார் தனது குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் இத்திருமணத்தை நடத்தியதாக கூறியதும் பஞ்சாயத்து தலைவர்களும் காஜல்- ராஜ்குமார் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். காஜலின் புது வாழ்க்கைக்கு குழந்தைகளால் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக அஜய்குமார் தனது இரு குழந்தைகளை தனது பராமரிப்பில் வளர்ப்பதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com