\
அடப்பாவி: ரிமோட் தராத மனைவி அடித்துக்கொலை!

அடப்பாவி: ரிமோட் தராத மனைவி அடித்துக்கொலை!

அடப்பாவி: ரிமோட் தராத மனைவி அடித்துக்கொலை!
Published on

டி.வி. ரிமோட்டை தராத மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகிலுள்ள அம்பாட் பகுதியில் வசிப்பவர் பாண்டுரங் மன்வட்கர். இவர் மனைவி ஷோபனா. மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த வியாழக்கிழமை இரவு எல்லோரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளியே சென்று விட்டு வந்த மன்வட்கர், மனைவியிடம் டிவி ரிமோட்டைக் கேட்டார். ‘இந்த புரோக்கிராமை பார்த்துட்டு பிறகு தாரேன்’ என்று சொன்னாராம் அவர். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்றுவிட்டனர். நள்ளிரவில், கோபம் அதிகமான மன்வட்கர், ஷோபனா தலையில் கல்லைப் போட்டுவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஷோபனா உயிரிழந்தார். தப்பியோடிய மன்வட்கரை போலீசார் தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com