woman hangs selfTwitter
இந்தியா
பியூட்டி பார்லருக்கு செல்வதை தடுத்த கணவர் - விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு
பியூட்டி பார்லருக்கு செல்வதை கணவர் தடுத்ததால் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தம்பதி பல்ராம் - ரீனா யாதவ். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, பியூட்டி பார்லருக்கு செல்லவிருப்பதாக ரீனா தனது கணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு பல்ராம் பியூட்டி பார்லருக்கு போகக்கூடாது என கூறவே, கணவன், மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் விரக்தியடைந்த ரீனா தனது வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் ரீனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.