\
விமானத்தில் இனி வைஃபை: புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

விமானத்தில் இனி வைஃபை: புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

விமானத்தில் இனி வைஃபை: புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!
Published on

உள்நாட்டு விமானங்களில் வைஃபை பயன்படுத்தலாம் என்றும் அதற்கான சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விமான விதிகள் தொடர்பாக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக, விமானங்களில் வைஃபை பயன்படுத்துவது குறித்து சில விதிகளை தெரிவித்துள்ளது.

அதன்படி, விமானப்பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஈ ரீடர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் Flight mode or Airplane modeல் வைஃபையை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக அந்தந்த குறிப்பிட்ட விமான கட்டுப்பாட்டு அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கான விதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு மத்திய அரசு வெளியிட்ட வரைவு விதிகளில் அறிவிக்கப்பட்ட விதி என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com