“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; மோடி மவுனம் காப்பது ஏன்” - சுஷ்மிதா தேவ்

“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; மோடி மவுனம் காப்பது ஏன்” - சுஷ்மிதா தேவ்
“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; மோடி மவுனம் காப்பது ஏன்” -  சுஷ்மிதா தேவ்

வங்கதேச நாட்டில் சிறுபான்மையின மக்களான இந்து சமுதாய மக்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஏன் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார் என்ற கேள்வியை பாஜக எழுப்பி இருந்தது. 

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஏன் பொது வெளியில் அறிக்கை ஏதும் வெளியிடாமல் உள்ளார். இந்த விவகாரத்தில் அவர் ஏன் மவுனம் காத்து வருகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுஷ்மிதா தேவ் கேட்டுள்ளார். 

“பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன என்பதை பாஜக கேட்டறிய வேண்டும். இந்தியா எப்போதுமே சிறுபான்மையின மக்களின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பிற்காக முன்நின்றுள்ளது. அதனால் பிரதமர் இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். ஒரு நாட்டின் சார்பாக நமது செயல்பாடு இருக்கு வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதாக இருக்க கூடாது” என அவர் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com