\
ரஜினியை ஏன் அரசியலுக்கு அழைக்கிறீங்க? கட்ஜூ கேள்வி

ரஜினியை ஏன் அரசியலுக்கு அழைக்கிறீங்க? கட்ஜூ கேள்வி

ரஜினியை ஏன் அரசியலுக்கு அழைக்கிறீங்க? கட்ஜூ கேள்வி
Published on

மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வு இல்லாதபோது அவரை ஏன் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி தனது பிளாகில் அவர் கூறியிருப்பதாவது:

1967-68ம் ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் நண்பர்களுடன் சிவாஜிகணேசன் நடித்த திரைப்படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன். படம் ஆரம்பித்த போது சிவாஜியின் காலைத்தான் காட்டினார்கள். அதற்கே திரையரங்கில் ஆரவராம் கிளம்பி விட்டது. அதேபோல இப்போது ரஜினிகாந்த் மீது ரசிகர்கள் பைத்தியமாக இருக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கின்றனர். மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வு இல்லை. அவரிடம் தீர்வு இல்லாதபோது அவரை அரசியலுக்கு அழைப்பது ஏன்? வறுமை, வேலையின்மை, விவசாய பிரச்னைக்கு ரஜினியிடம் தீர்வு உள்ளதா? திரைத்துறையினரை தென்னிந்தியவர்கள் வழிபடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இவ்வாறு கூறியுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com